தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய மோசடிகளின் எண்ணிக்கையும் அதன் தரமும் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்களது பேஸ்புக்கில் தங்களது ஜாதகத்தையே போட்டு விடுகின்றனர். காக்கி சட்டை படத்தில் பேஸ்புக் தகவல்களை கொண்டு வீட்டில் திருடிய கேஸை பார்த்திருப்பீர்கள். இங்கு சில வருடங்களுக்கு முன்பு போட்ட பேஸ்புக் போஸ்டை வைத்து ரூ.1.19 கோடியை ஒரு மோசடி கும்பல் ஆட்டையை போட்டது தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் தார்வாட் பகுதியை சேர்ந்தவர் சிவநாகப்பா கோரிஷெட்டர். இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அப்போது சிவநாகப்பா உடன் பணியாற்றிய பேராசிரியர் ஜான் கிளார்க் விபத்தில் இறந்ததைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதினார்.
அதில் ஜான் கிளார்க் மனைவி டோபரா ஐக்கிய இராச்சியத்தில் புற்றுநோயுடன் போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில், டோபரா தம்பதியரின் சேமிப்பான ரூ. 45.69 கோடியை சிவநாகப்பா கோரிஷெட்டருக்கு டோபரா குடும்பம் மாற்ற விரும்புவதாகவும், அந்த பணத்தை வைத்து சிவநாகப்பா இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவ ஒரு தொண்டு அறக்கட்டளையைத் தொடங்க வேண்டும் என்று ஒரு செய்தி வந்துள்ளது.
77 வயதான ஓய்வுபெற்ற பேராசிரியர் இதை உண்மை என்று நம்பியுள்ளார். தனிப்பட்ட முறையில் மெயில் மூலம் தொடர்பு கொண்டு பேசும்போது கூட அவர்கள் பேசுவது எல்லாம், தான் பேஸ்புக்கில் எழுதிய கதை என்று அவருக்கு புரியவில்லை. தொடர்ந்து அவர்கள் சொல்லும் அனைத்தையும் பேராசிரியர் செய்துள்ளார்.
அதை தொடர்ந்து அதிகாரிகளாகக் காட்டிக் கொண்ட சைபர் கிரைமினல்கள் பதிவுக் கட்டணம், பாதுகாப்பு வைப்பு, வருமான வரி மற்றும் பிற செலவுகள் என்ற பெயரில் ரூ. 1.19 கோடியை அனுப்ப செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் தொலைபேசி மூலம் அழைத்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கலந்து பேசியுள்ளனர். அப்போதுதான் மோசடி குறித்து சிவநாகப்பாவிற்கு புரிந்துள்ளது.
பிப்ரவரி 5 ஆம் தேதி, அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் காவல்துறையை அணுகி முழு நிகழ்வுகளையும் விவரித்தார். பின்னர் சம்பத்தப்பட்ட குற்றவாளிகள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவுகள் 66சி (அடையாளத் திருட்டு) மற்றும் 66டி (கணினி வளத்தைப் பயன்படுத்தி நபர் மூலம் ஏமாற்றுதல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 419 (நபர் மூலம் ஏமாற்றுதல்) மற்றும் 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் பணம் பிடுங்குதல் ) ஆகியவற்றின் கீழ் ஹூப்பள்ளி தார்வாட் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விசாரணையின்போது அவர்கள் பயன்படுத்திய அனைத்து தகவல்களும் சிவநாகப்பாவின் சமூக வலை தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக அவரது கணக்கை கவனித்து வந்த நபர்கள் அவரிடம் பேச்சு கொடுத்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyber crime, Karnataka