ஒரு பக்கம் கொரோனா பரவல் உச்சநிலையில் இருந்து வந்தாலும், வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு நடவடிக்கையை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது.
ஓமைக்ரான் எனும் புதிய வகை கொரோனாவால் நாட்டில் கொரோனா 3வது அலை தூண்டப்பட்டது. டிசம்பர் மாதம் முதலே கொரோனா பரவல் பல்வேறு மாநிலங்களிலும் அதிகரித்து வந்தது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு, உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர்.
முக்கியமாக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, டெல்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு முடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள வார இறுதி ஊரடங்கை ரத்து செய்வதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
Also read: தென்னிந்தியாவில் அடுத்த 30 ஆண்டுகளில் வானிலை மாற்றங்கள் - ஆய்வில் புதிய தகவல்கள்
கர்நாடகாவில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் ,அரசியல் கட்சியினர், வியாபாரிகள் என பல்வெறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டன. இதையடுத்து வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ரத்து செய்யலாமா என்பது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் வல்லுநர் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன் முடிவில் வார இறுதி நாட்களில் அமலில் இருந்து வரும் ஊரடங்கு இந்த வாரம் முதலே ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். அதே நேரத்தில் இரவு நேர ஊரடங்கு ( இரவு 10 - காலை 5) தொடர்ந்து அமலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
Also read:
பாகிஸ்தான் சிதைந்துவிடும், இம்ரான் கான் ஐஎஸ்ஐ கைப்பாவை - தாலிபான்கள் கடும் தாக்கு
கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது 5% என்ற அளவிலேயே இருக்கிறது. இது அதிகரிக்கும்பட்சத்தில் மீண்டும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே அதிக அளவாக கர்நாடகாவில் நேற்று (ஜன 20) மட்டும் 47,754 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 30,000க்கும் மேற்பட்டோர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.