கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு!

கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு!

பொது முடக்கம்(மாதிரிப் படம்)

கர்நாடகாவில் நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

 • Share this:
  கர்நாடகாவில் நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

  கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 34,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது, இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13.39 லட்சத்தை கடந்தது. அதேபோல், நேற்று ஒரே நாளில் 143 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 14,426ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, மாநிலத்தில் 20 சதவீதம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில், கர்நாடகாவில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா கூறும்போது, நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.

  அனைத்து அமைச்சர்கள் மற்றும் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் நாங்கள் இந்த பொதுமுடக்கம் முடிவை எடுத்துள்ளோம். அதன்படி மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

   

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: