கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு ராகுலின்அணுகுமுறையே காரணம்: தமிழிசை சவுந்தரராஜன்

பாஜக ஜனநாயக படுகொலை செய்துள்ளதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு ராகுலின்அணுகுமுறையே காரணம்: தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்
  • News18
  • Last Updated: July 24, 2019, 8:04 AM IST
  • Share this:
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு ராகுல் காந்தியின் அணுகுமுறையே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நல்லது - தமிழிசை

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் ஆட்சியை இழந்துள்ளது. இதற்கு, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் செயல்பாடே காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.


ஜனநாயகத்துக்கு எதிராக பாஜக செயல்பாடு - கே.எஸ்.அழகிரி

பாஜக தலைமை குதிரைப் பேரம் மூலம் கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்த்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

கார்நாடக அரசியல் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைப்பது ஜனநாயக படுகொலைக்கு சமம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாஜகவை சாடியுள்ளார்.

கோவாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் பாஜக

மத்தியில் ஆளும் பாஜக, கோவாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும், தனது அதிகார துஷ்பிரயோகம் மூலம் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க... கர்நாடக முதல்வர்களின் நாற்காலிகள் ஆடிய கதை

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading