• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது?

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது?

சித்தராமையா | குமாரசாமி | எடியூரப்பா

சித்தராமையா | குமாரசாமி | எடியூரப்பா

இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி சுயேட்சை எம்எல்ஏக்கள் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், மதசார்ப்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எ.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது. ஆட்சியை தக்க வைக்க தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத் தர தயாராக இருப்பதாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்ததை அடுத்து சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது தொடங்கிய விவாதம், 19-ம் தேதி இரவு வரை தொடர்ந்தது.

வாக்கெடுப்பு நடத்தி முடிக்கும்படி ஆளுநர் விதித்த இரண்டு கெடுவையும் முதலமைச்சர் குமாரசாமி புறக்கணித்துவிட்ட நிலையில், சபாநாயகர் சட்டப்பேரவையை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அமைச்சர் சிவகுமார்


சட்டப்பேரவை மீண்டும் இன்று கூடுகிறது

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடும் சட்டப்பேரவையில் விவாதத்திற்கு பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதனை எதிர்கொள்வது குறித்து பாஜக தலைவர் எடியூரப்பா தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் ரமடா ஹோட்டலில் நேற்றிரவு ஆலோசனை மேற்கொண்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்-குண்டு ராவ்

தாஜ் விவந்தா ஹோட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டமும், பிரஸ்டிஜ் கோல்ப்சைர் ரிசாட்டில் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கூட்டமும் நடைபெற்றது. இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் குண்டு ராவ், நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும் இதில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் சிறப்பாக நடந்தது. எம்.எல்.ஏக்கள் உற்சாகமாக உள்ளனர். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நாங்கள் வெற்றி பெறுவோம் என முழு நம்பிக்கை உள்ளது.

குமாரசாமி


அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு குமாரசாமி அழைப்பு

முன்னதாக முதலமைச்சர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஜனநாயகத்தை சீரழிக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகளை பேரவையில் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



முதலமைச்சரை மாற்ற காங்.-ஜனதாதளம் முடிவு?

இதற்கிடையே, ஆட்சியை தக்க வைப்பதற்காக முதலமைச்சரை மாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையா, பரமேஸ்வரா உள்ளிட்டோரை முதலமைச்சராக நியமிக்க வாய்ப்பிருப்பதாகவும், இதனை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்,

அமைச்சர் சிவக்குமாரின் இந்த கருத்தை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நிராகரித்துவிட்டனர். தங்களது சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரை மாற்றுவது என்பது காலம் கடந்த செயல் என்றும் கூறியுள்ளனர்.

குமாரசாமி அரசுக்கு ஆதரவாக செயல்படவும் - மாயாவதி

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என பகுஜன் சமாஜ் எம்எல்ஏ மகேஷ் அறிவித்திருக்கும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக செயல்படும்படி அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவுறுத்தியுள்ளார்.

மாயாவதி


இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு?

இதனிடையே இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி சுயேட்சை எம்எல்ஏக்கள் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோன்று கொறடா உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், சபாநாயகருக்கு ஆளுநர் கெடு விதிப்பதற்கு எதிராக முதலமைச்சர் குமாரசாமியும் தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... கர்நாடகா அரசியலில் சூறாவளி





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: