கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி?

காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்ததால் தான் மக்களவை தேர்தலில் தேவகவுடா தோல்வியை சந்தித்ததாக மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ கவுரி சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

Vaijayanthi S | news18
Updated: May 28, 2019, 10:06 AM IST
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி?
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
Vaijayanthi S | news18
Updated: May 28, 2019, 10:06 AM IST
கர்நாடகாவில் குமாரசாமி அரசு ஜூன் 10-ம் தேதிக்கு பின் கலைந்துவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.என்.ராஜண்ணா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், எஞ்சிய 4 ஆண்டுகளையும் நிறைவு செய்வோம் என்று துணை முதலமைச்சர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மக்களவை தேர்தலில் 28 இடங்களில் பாஜக 25-ல் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தியுள்ளார்.

பதவி பறிக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கி கோலி உள்ளிட்ட 4 பேர் ஆளும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், அக்கட்சியின் ரமேஷ் ஜார்கிகோலி, சுதாகர், பாஜக மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசியுள்ளனர்.


இது ஒருபுறம் இருக்க ஜூன் 10-ம் தேதிக்குப் பின் கர்நாடகாவில் ஆட்சி கவிழும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.என்.ராஜண்ணா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், தங்களது அரசுக்கு எந்தவொரு நெருக்கடியும் இல்லை என்று துணை முதலமைச்சர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்ததால் தான் மக்களவை தேர்தலில் தேவகவுடா தோல்வியை சந்தித்ததாக மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ கவுரி சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

Loading...

Also see... ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார் ஜெகன்மோகன் ரெட்டி: வரும் 30-ம் தேதி பத்வியேற்பு

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...