நித்யானந்தா சொத்து விவரப் பட்டியலைக் கொடுங்கள் - நீதிமன்றம் ஆணை!

மார்ச் 23-ம் தேதிக்குள் சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய தவறினால் முடக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா சொத்து விவரப் பட்டியலைக் கொடுங்கள் - நீதிமன்றம் ஆணை!
நித்யானந்தா சொத்து
  • Share this:
நித்யானந்தாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு கர்நாடகாவின் ராம் நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தாவுக்கு எதிரான பாலியல் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா ஆஜராகாததால், பலமுறை உத்தரவிட்டும் நேரில் ஆஜராகாத நித்யானந்தாவிற்கு இனியும் விலக்கு அளிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

கர்நாடகா சிஐடி போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நித்யானந்தாவை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் பட்டியலை வரும் 23-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தவறினால் சொத்துகள் முடக்கம் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் அன்றைய தினம் நித்யானந்தா ஆஜராகாவிட்டால் அவரது சொத்துகள் முடக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

Also see...
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading