ஹோம் /நியூஸ் /இந்தியா /

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000... பிரியங்கா காந்தி அளித்த முக்கிய வாக்குறுதி..!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000... பிரியங்கா காந்தி அளித்த முக்கிய வாக்குறுதி..!

பெண்களுக்கு ரூ.2000

பெண்களுக்கு ரூ.2000

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், கட்சியினர் தற்போதே பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எதிர்கட்சியான காங்கிரஸ் தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு கோட்டை மைதானத்தில் நான் நாயகி என்ற தலைப்பில் காங்கிரஸ் மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக ஆட்சியில் நீங்கள் நிம்மதியாக வாழ்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்த அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஏற்கெனவ அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Congress, Priyanka gandhi