கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் தனது கட்சி நிர்வாகி ஒருவரை கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பொதுவெளியில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் அறையும் காட்சி இணையத்திலும் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜி.மடெகவுடாவின் உடல்நிலையைப் பற்றி அறிய மாண்டியாவிற்கு சிவக்குமார் வந்தபோது அவர் அருகில் நடந்துவந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமாரின் தோளில் கை போட முயன்றுள்ளார். அப்போது திடீரென கோபமடைந்த சிவக்குமார், அந்த நிர்வாகியின் கன்னத்தில் ‘பளார்’ என ஒரு அறைவிட்டார். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
#WATCH Karnataka Congress President DK Shivakumar slaps a party worker for trying to put his hand on his shoulder in Mandya yesterday pic.twitter.com/6ldIB08mdw
— ANI (@ANI) July 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், அந்த நிர்வாகி சமூக இடைவெளியின்றி நடந்து கொண்டதால் கோபமடைந்து அறைந்ததாக விளக்கமளித்துள்ளார். அத்துடன் ஊடகங்களும் அங்கு இருப்பதை அறிந்த காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், அந்த வீடியோவை நீக்குமாறு ஒளிப்பதிவாளர்களை வலியுறுத்தினார். 2018ஆம் ஆண்டு பெல்லாரியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் அடித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Congress leader, Congress party, Karnataka congress, Viral Video