• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளா சென்று வந்த கர்நாடகா கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா- கல்லூரிக்கு சீல்

கேரளா சென்று வந்த கர்நாடகா கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா- கல்லூரிக்கு சீல்

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களில் சிலர் அண்மையில் கேரளா சென்று வந்தது தெரிய வந்துள்ளது. கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  • Share this:
    கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களில் சிலர் அண்மையில் கேரளா சென்று வந்தது தெரிய வந்துள்ளது. கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகே மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளை மாநில அரசுகள் திறந்து வருகின்றன.

    செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் அறிவித்துள்ளார்.

    கர்நாடகாவிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 657 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,217 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன.

    இதுபோலவே கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது. வாரத்தில் ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் செயல்படுகிறது. சமூக இடைவெளி, முகக் கவசத்துடன் மாணவர்கள் வருகை தருகின்றனர்.

    இந்நிலையில் கோலாரில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாணவர்களில் சிலர் அண்மையில் கேரளா சென்று வந்தது தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனையடுத்து கல்லூரி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கல்லூரி மாணவர்களை கேரளா செல்ல அனுமதித்த கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: