இரு கல்லூரி மாணவிகளுடன் லிப் லாக் சேலஞ்ச் விளையாடிய எட்டு மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற இந்த சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், அம்மாநில காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் அடுக்குமாடிக் குடியிருப்பை வாடகைக்கு எடுத்து உடன் படிக்கும் இரண்டு மாணவிகளை அங்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மாணவ மாணவியர்கள் தங்கள் கல்லூரி சீருடையிலேயே சென்ற நிலையில், அங்கு ட்ரூத் ஆர் டேர் என்ற விளையாட்டை விளையாடியுள்ளனர். அப்போது, அவர்கள் லிப்லாக் சேலஞ்ச் என்ற பேரில் மாணவர் சக மாணவிக்கு நீண்ட நேரம் உதட்டோடு உதடு முத்தம் தரும் லிப் லாக் போட்டியை நடத்தியுள்ளனர். இதை அருகில் இருந்த மற்ற மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது.
இதை படம் பிடித்த 17 வயது மாணவர் கடந்த வாரம் வீடியோவை வாட்ஸ்ஆப்பில் அப்லோட் செய்து பரப்பியுள்ளார். கல்லூரி சீருடையில் மாணவர்கள் லிப் லாக் செய்து கொள்ளும் இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதன் பேரில் கர்நாடகா மாநிலத்தின் மங்களூரு காவல்துறை சம்பவத்தில் ஈடுபட்ட 8 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் பணி நியமன மோசடி: மேற்கு வங்கஅமைச்சரின் கூட்டாளி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. அமலாக்கத்துறை சோதனையில் அம்பலம்!
காவல்துறை விசாரணையில் இவர்கள் இந்த வீடியோவை வைத்து இரு மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை தந்துவந்ததாகவும் கூறப்படுகிறது.இது போன்ற ஒழுங்கீன நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடுவதை கல்லூரி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College student, Karnataka, Lip Kiss, Mangalore, POCSO case, Viral Video