• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பா.ஜ.கவுக்கு சாதகமாக கருத்து கணிப்புகள்! கர்நாடக அரசியலில் குழப்பம்; ஆட்சி கலையுமா?

பா.ஜ.கவுக்கு சாதகமாக கருத்து கணிப்புகள்! கர்நாடக அரசியலில் குழப்பம்; ஆட்சி கலையுமா?

சித்தராமையா, குமாரசாமி

சித்தராமையா, குமாரசாமி

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உண்மைக்கு நெருக்கமாக உள்ளது. சித்தராமையா ஒரு திமிர்பிடித்தவர். காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் பயனற்றவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. தேசிய அளவில் பா.ஜ.க கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்று அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் தெரிவித்துள்ளன.

கர்நாடகாவில் பா.ஜ.க பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகள் வரை பா.ஜ.க வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஷன் பேய்க், காங்கிரஸ் கட்சித் தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

நியூஸ்18யிடம் பேசிய அவர், ‘இஸ்லாமிய மக்கள், காங்கிரஸைத் தாண்டி வேறு கட்சியைத் தேடத் தொடங்கியுள்ளனர். இந்தமுறை, அவர்கள் பா.ஜ.கவைக் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர். இஸ்லாமியர்கள் காங்கிரஸின் வாக்கு வங்கிகள் கிடையாது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உண்மைக்கு நெருக்கமாக உள்ளது. சித்தராமையா ஒரு திமிர்பிடித்தவர். காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் பயனற்றவர்’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவருடைய பேச்சு தொடர்பாக, காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கருத்துக் கணிப்புகள் குறித்து நியூஸ்18யிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தன்விர் அஹமது, ‘வாக்கு எண்ணிக்கை முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்காது. அதனால், எங்களது கூட்டணிக்கு பிரச்னையை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கர்நாடகா ஆளும் அரசின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: