அண்ணாமலை போராட்ட அறிவிப்புக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி!

அண்ணாமலை போராட்ட அறிவிப்புக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பதிலடி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்ட அறிவிப்புக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார்.

 • Share this:
  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக‌ எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிராக‌ தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

  இதனிடையே, அண்மையில் செய்தியாளர்கள சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக அணை கட்ட நினைக்கும் நிலையில், மேகதாதுவிற்கு ஒரு சிறிய செங்கலை கூட வைக்க விடமாட்டோம். தொடர்ந்து தமிழக பாஜக, தமிழக நலன் சார்ந்து செயல்படும்.

  Also read: சார்ஜ் போட்டபடி பேசிய போது செல்போன் வெடித்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

  எந்த காரணத்திற்காகவும் மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 5ஆம் தேதி டெல்டா பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம் என்று அறிவித்தார்.

  இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதமாக தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக பசவராஜ் பொம்மை மேலும் கூறும்போது, மேகதாது அணை திட்டம் கர்நாடகாவின் உரிமை; அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் குறித்து எனக்கு கலவை இல்லை.

  யாரும் உண்ணாவிரதம் இருக்கட்டும், அல்லது உணவு உண்ணட்டும், எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. காவிரியில் கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது. அணையின் திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: