Home /News /national /

ராஜினாமா கடிதம் கொடுத்த ஈஸ்வரப்பா.. உண்மை வெளி வரும் என முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி

ராஜினாமா கடிதம் கொடுத்த ஈஸ்வரப்பா.. உண்மை வெளி வரும் என முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

ஈஸ்வரப்பாவை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் இதில் அரசியல் செய்வது முறையில்லை என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    கட்சிக்கு அவப் பெயர் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக  ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்துள்ளது அரசுக்கு பின்னடைவல்ல என அம்மாநில முதமலைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கான்ட்ராக்டர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ஈஸ்வரப்பா, தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் பொம்மையின் இல்லத்திற்கு வந்து தனது ராஜினாமாவை அளித்தார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் இம்முடிவை எடுத்துள்ளதாக ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

    அம்மாநிலத்தில் சந்தோஷ் பாட்டில் என்ற கான்ட்ராக்டர் அமைச்சர் தன்னிடம் நலத் திட்டங்கள் ஒப்பந்தத்தில் 40 சதவீதம் கமிஷன் கேட்டு தொல்லை செய்து அச்சுறுத்தியதாக பகிரங்க புகார் எழுப்பினர். இந்தப் புகாரை கடந்த மாதம் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மூலம் கடிதம் மூலம் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதால் தான் வாழ வழியில்லை எனக் கூறி தற்கொலை கடிதம் எழுதி வைத்து உடுப்பியில் உள்ள விடுதி ஒன்றில் உயிரை மாய்த்துக்கொண்டார்.

    இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் அமைச்சர் ஈஸ்வரப்பா, முதலமைச்சர் பொம்மை ஆகியோர் பதவி விலக வேண்டும் என பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டக் களத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமய்யா ஆகியோர் நேரடியாக இறங்கி மாநில அரசுக்கு கடும் அழுத்தம் அளித்து வருகின்றனர்.

    Also read... தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கியதாக பதிவான வழக்கு - காவல் உதவி ஆணையரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

    இதையடுத்து அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று மாலை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பொம்மை, "ஈஸ்வரப்பாவின் இந்த முடிவால் அரசுக்கு பின்னடைவு ஏதும் இல்லை. தான் 100 சதவீதம் அப்பாவி என ஈஸ்வரப்பா தெரிவிக்கிறார். விசாரணையை விரைந்து நடத்தி தான் நிரபராதி என்பதை நிரூபிக்கத் தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    அதற்கு முன்னதாகவே ஈஸ்வரப்பாவை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் இதில் அரசியல் செய்வது முறையில்லை.
    காவல்துறை அனைத்து கோணத்திலும் விசாரணை செய்து உண்மையை வெளியே கொண்டு வரும். கைது செய்வதா வேண்டாமா என்பதை காவல் துறை தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தாங்களே விசாரணை அதிகாரிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் செயல்படுவதை ஏற்க முடியாது" எனக் கூறினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Karnataka

    அடுத்த செய்தி