கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 2.17 லட்சத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து இரண்டாவது அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் உத்தர பிரேதச முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் உள்ளிட்டவர்களுக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே எடியூரப்பாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிக்கு ஆளாகியுள்ளார்.

  இந்நிலையில், காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, லேசான காய்ச்சல் பாதிப்பு காரணமாக இன்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் நலமுடன் உள்ளேன். எனினும், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் நோய்தொற்று பரிசோதனை மேற்கொள்வதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  முன்னதாக, கடந்த புதன்கிழமையன்று கேரள வனத்துறை அமைச்சர் சுனில் குமாருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: