கர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்!

முதற்கட்டமாக அமைச்சர்கள் 13 பேர் மட்டும் இன்று பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: August 20, 2019, 8:30 AM IST
கர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்!
எடியூரப்பா
Web Desk | news18
Updated: August 20, 2019, 8:30 AM IST
கர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

கர்நாடகாவில் கடந்த மாதம் 26-ம் தேதி குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார்.  அப்போது முதல் சுமார் 20 நாட்களுக்கும் மேலாக அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை டெல்லியில் அமித்ஷாவை எடியூரப்பா சந்தித்து பேசினார்.

அப்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து அமித்ஷா இறுதி ஒப்புதல் அளித்தை அடுத்து, இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற முடியும் என்ற நிலையில், முதற்கட்டமாக அமைச்சர்கள் 13 பேர் மட்டும் இன்று பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் அமைச்சர்கள் கே. எஸ். ஈஸ்வரப்பா, பசவராஜ் பொம்மை மற்றும் கட்சி மாறி வந்த ஹெச். நாகேஷ் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க... இம்ரான்கானைப் போல பேசுகிறார் ஸ்டாலின் - அமைச்சர்
First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...