காங்கிரஸுக்கு மக்கள் தகுந்த படிப்பினை கொடுத்துள்ளனர்! கர்நாடகா வெற்றி குறித்து மோடி உற்சாகம்

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.

காங்கிரஸுக்கு மக்கள் தகுந்த படிப்பினை கொடுத்துள்ளனர்! கர்நாடகா வெற்றி குறித்து மோடி உற்சாகம்
எடியூரப்பா
  • News18
  • Last Updated: December 9, 2019, 9:36 PM IST
  • Share this:
கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், தனது தலைமையிலான ஆட்சியை முதலமைச்சர் எடியூரப்பா தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், காலியான 15 தொகுதிகளில் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வழக்கு காரணமாக ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மஸ்கி ஆகிய இருதொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 15 தொகுதிகளில் 12 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. கர்நாடகா சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய வெற்றியின் மூலம் கர்நாடகா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 117 ஆக அதிகரித்துள்ளது. தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக பாஜக மாறியுள்ளதன் மூலம், எடியூரப்பா தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து பாஜக தொண்டர்கள் தேர்தல் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் எடியூரப்பா, தனது இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும கட்சியினருடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார். மக்கள் சிறந்த தீர்ப்பை அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது எந்த குழப்பமும் இல்லை. எஞ்சியுள்ள மூன்றரை ஆண்டுக்ள் இடையூறு இல்லாமல் நிலையான ஆட்சி தொடரும். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்


காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. HOSAKOTE தொகுதியில் மட்டும் சுயேட்சை வேட்பாளராக சரத்குமார் கவுடா வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜக எம்பி பச்சே கவுடாவின் மகன் ஆவார். பாஜகவில் வாய்ப்பளிக்காததால், அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்ட, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 13 எம்எல்ஏக்களில் 11 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதுமட்டுமின்றி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டையாக திகழ்ந்த கிருஷ்ணராஜ பேட்டை தொகுதியை, முதல் முறையாக பாஜக வென்று, தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் கர்நாடக அமைச்சருமான சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மக்களின் தீர்ப்பை, காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பின்வாசல் வழியாக திருடிக் கொண்டதாகவும், அதற்கு மக்கள் தக்க படிப்பினை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தென்மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவில்லை என கூறி வருவோருக்கு, கர்நாடகா மக்கள் பதிலளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

இதையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சோனியாகாந்திக்கு அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Also see:


 
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading