கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள அரசிகிரா என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணத்திற்காக தன்னை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என் நோக்கில் அருகே உள்ள கங்கா ஸ்ரீ பியூட்டி பார்லர் என்ற அழகு நிலையத்தை புதுப்பெண் அனுகியுள்ளார்.
இதையும் படிங்க; வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை... அரசு எச்சரிக்கை..!
இந்நிலையில், 10 நாள்களுக்கு முன்னர் மேக் அப் போடுவதற்காக அந்த பியூட்டி பார்லர் ஸ்பாவுக்கு சென்ற நிலையில், பார்லர் உரிமையாளர் கங்கா மேக் அப் போட தொடங்கியுள்ளார். புதுப்பெண்ணிடம் அவர் தான் புதுவகை மேக் அப் ஒன்றை கற்று வைத்துள்ளேன், அதை போட்டுக்காட்டவா என்ற கேட்கவே மணப்பெண்ணும் அதற்கு ஓகே சொல்லியுள்ளார்.
அதன்படி, பெண்ணின் முகத்திற்கு கிரீம் பூசி பவுன்டேஷன் மேக் அப் போட்டு 'ஸ்டீம்' எனப்படும் சுடுநீராவியில் முகத்தை காட்டியுள்ளார். ஸ்டீம் எடுத்த சில நிமிடங்களில் மணப்பெண்ணின் முகம் வெந்து போய் வீங்கியுள்ளது. இதனால் மணப்பெண் அதிர்ச்சி அடைந்த நிலையில், அவர் பதறிப்போய் மருத்துவமனைக்கு சென்று தன்னை அனுமதித்துள்ளார். இந்த புது மேக் அப் காரணமாக பெண்ணின் முகமே மாறிப்போனதாகவும் அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த எதிர்பாராத நிகழ்வு காரணமாக மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். திருமணம் நின்று போன நிலையில், ப்யூட்டிசியன் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேக் அப் போட சென்ற பெண் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெறும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.