கர்நாடகாவில் ஆட்சியமைப்பது தொடர்பாக இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தும் பாஜக தலைவர்கள்!

உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை இன்று மாலை கர்நாடகா பாஜக தலைவர்கள் சந்தித்துப் ஆலோசனை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 25, 2019, 7:54 AM IST
கர்நாடகாவில் ஆட்சியமைப்பது தொடர்பாக இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தும் பாஜக தலைவர்கள்!
பி.எஸ்.எடியூரப்பா
Web Desk | news18
Updated: July 25, 2019, 7:54 AM IST
கர்நாடகாவில் ஆட்சியமைப்பது தொடர்பாக கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்துவதற்காக மாநில பாஜக தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர். பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவையில் நீண்ட இழுபறிக்குப் பின், நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது. இதையடுத்து, முதலமைச்சர் பதவியிலிருந்து குமாரசாமி விலகியுள்ளார்.

இதையடுத்து, பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்றும் முதலமைச்சராக எடியூரப்பா நாளை பதவியேற்பார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், கட்சித் தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்க முடிவு செய்யப்பட்டது.


இதன்படி, கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்துவதற்காக கர்நாடக பாஜக மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டார், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவாலி உள்ளிட்டோர் நேற்றிரவு டெல்லி சென்றடைந்தனர்.

உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை இன்று மாலை அவர்கள் சந்தித்துப் பேசுகின்றனர். அவர்கள் இருவரும் தெரிவிக்கும் ஆலோசனையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மாநில பாஜக மேற்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க... கர்நாடக முதல்வர்களின் நாற்காலிகள் ஆடிய கதை

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...