கர்நாடகாவில் மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், நெற்றியில் பொட்டு வைக்காத பெண் ஒருவரை திட்டி தீர்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோலார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் முனுசாமி. இவர் மகளிர் தின நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார். மகளிர் சுய உதவிக்குழுவினரின் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்த அவர், நெற்றியில் பொட்டு வைக்காத பெண் ஒருவரை கண்டபடி திட்டினார்.
அறிவு இருக்கிறதா என்று எல்லோர் முன்னிலையிலும் சாடிய எம்.பி, உன் கணவர் இருக்கிறாரா? இறந்துவிட்டாரா? என்று பேசியது அங்கிருந்த பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
"Wear a Bindi first. Your husband is alive, isn't he. You have no common sense" says this #BJP MP #Muniswamy to a woman vendor.#Karnataka #Kolar #WomensDay pic.twitter.com/YSedSDbZZB
— Hate Detector 🔍 (@HateDetectors) March 9, 2023
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவின் கலாசாரத்தை பிரதிபலிப்பதாக கூறியுள்ளது. மேலும் இதற்கு தமிழ்நாடு எம்.பி கார்திக் சிதம்பரம் தனது கண்டணங்களை பதிவு செய்துள்ளார். அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பாஜக இந்தியாவை ‘இந்துத்வா ஈரானாக’ மாற்றி வருகிறது. இவர்கள், ‘நவீன காவலர்களாக’ இந்தியாவை கண்காணிப்பார்கள்” என பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.