Home /News /national /

மைக் ஆன்-ல் இருந்தது தெரியாமல் ரகசியம் பேசி சிக்கிய பாஜக எம்.பி..

மைக் ஆன்-ல் இருந்தது தெரியாமல் ரகசியம் பேசி சிக்கிய பாஜக எம்.பி..

BJP

BJP

இவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர் வட கொரிய சர்வாதிகாரி (கிம் ஜாங் உன்) போன்றவர். இவர் நம் மாவட்டத்தை பாழாக்கிவிட்டார். இந்த பாழாய்ப்போன நபரால் அடுத்த தேர்தலில் இந்த மாவட்டத்தில் ஒரு சீட் கூட நம் கட்சிக்கு கிடைக்காது.

  மைக் ஆன் நிலையில் இருந்ததை அறியாமல், அமைச்சர் குறித்த ரகசியங்கள் பேசி பாஜக எம்.பி ஒருவர் சிக்கலில் மாட்டியுள்ளார்.

  கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துமகூரு மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி ஜி.எஸ்.பசவராஜூ, சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பைரதி பசவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாக கூறி சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் முன்னதாகவே மேடையிலிருந்து கிளம்பிச் சென்றார். செய்தியாளர் சந்திப்பு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு எம்.பி ஜி.எஸ்.பசவராஜூ அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் பைரதி பசவராஜிடம் ரகசியமாக பேசத் தொடங்கினார். அப்போது மைக் ஆன் நிலையில் இருந்ததை இருவரும் கவனிக்கவில்லை.

  Also read:    திருப்பதி ஏழுமலையான் கோவில் வெளிநாட்டு பக்தர்களுக்கு சிக்கல்..

  சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசுவாமியை ஒருமையில் பேசிய எம்.பி ஜி.எஸ்.பசவராஜூ,  "இதோ கிளம்பிச் செல்கிறாரே இந்த அமைச்சர், இவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இவர் வட கொரிய சர்வாதிகாரி (கிம் ஜாங் உன்) போன்றவர். இவர் நம் மாவட்டத்தை பாழாக்கிவிட்டார். இந்த பாழாய்ப்போன நபரால் அடுத்த தேர்தலில் இந்த மாவட்டத்தில் ஒரு சீட் கூட நம் கட்சிக்கு கிடைக்காது.

  இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற போது, ஒரு அரசு அதிகாரியை பார்த்து நீ உன் மனைவியின் துணிகளை துவைக்க தான் லாயக்கு, கூட்டத்தில் இருந்து கிளம்பிச் செல் என சத்தம் போட்டிருக்கிறார். அந்த அதிகாரி என்ன இவருடைய வேலையாளா?”

  Also read:  இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் டேக்ஸி சேவை - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

  எம்.பி இவ்வாறு ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட அமைச்சர் பைரதி பசவராஜ் அவரை அமைதிப்படுத்த முயன்றபோதும், அவர் சமாதானம் அடையாமல் தொடர்ந்து பேசியிருக் கொண்டிருந்தார். அவர் கூறியதாவது, “1000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட நபரை நம் மாவட்டத்துக்கு கொண்டு வந்தார். அந்த நபர் இதுவரை நம்மை ஒரு முறை கூட அழைத்துக் பேசியதில்லை” என தெரிவித்தார்.

  ஜி.எஸ்.பசவராஜூ எம்.பி பேசும்போது கடந்த எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட்ட லோகேஷ் கவுடா குறித்து பேசியிருக்கக் கூடும் என கூறப்படுகிறது. இதன் பின்னர் எம்.பி அமைதியடைந்து, செய்தியாளர் சந்திப்பு தயாரானார். இருப்பினும் இந்த ஒட்டுமொத்த உரையாடலும் பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  Also read:  ‘மோடி வாழ்க’ என கோஷமிட்டு பாஜகவினரிடம் இருந்து விடுபட்ட பஞ்சாப் துணை முதல்வர் - வைரல் வீடியோ

  இதனிடையே, எம்.பியின் பேச்சு குறித்த விடியோ வைரலான நிலையில் இது குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி, எம்.பி ஜி.எஸ்.பசவராஜூ தனது மனதில் தோன்றியவற்றை பேசியிருக்கிறார். எனக்கு வட கொரிய அதிபரை பற்றி தெரியாது. அவர்களுக்கு இது தான் விருப்பமென்றால், வேண்டுமென்றால் என்னை கட்சியிலிருந்து நீக்கட்டும்” என்றார்.

  முன்னதாக இதே போல காங்கிரஸ் தலைவர்கள் இருவர் சொந்தக் கட்சித் தலைவர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Arun
  First published:

  Tags: BJP, Karnataka

  அடுத்த செய்தி