கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 2021ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சட்டமன்ற மேலவையில் பாஜவிற்கு பெரும்பான்மை இல்லாததால், அந்த சட்ட மசோதா தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் காலியான சட்டமன்ற மேலவை இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அதில் பாஜக பெரும்பான்மையை பெற்றது.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில எதிர்கட்சி தலைவர், மசோதாவில் நகலை கிழித்து எரிந்து, இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து இந்த சட்டம் நேற்று சட்டமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: கர்நாடகாவில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்..!
இந்த சட்டத்தின்படி, கட்டாய மதம் மாற்றும் உறுதி செய்யப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் தண்டனையும் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும்.
இந்நிலையில் பாஜகவில் இருந்தே இந்த சட்டத்திற்கு எதிராக கலகக்குரல் எழுப்பப்பட்டுள்ளது. இச்சட்டத்தை எதிர்த்து சட்டமன்ற மேலவையில் பாஜக உறுப்பினர் விஸ்வநாத் பேசியுள்ளார். மதம் மாறுபவர்கள் ஆசைக்காக மாறுவதில்லை எனவும் நாடு முழுவதும் தீண்டாமை என்ற கொடிய தீ உள்ளது, அதிலிருந்து தப்பிக்கத்தான், பிற மதத்திற்கு வேறு வழியில்லாமல் மாறுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
“சாதியை ஒழிக்காமல் மதம் மாற்றத்தை தடை செய்வதை எப்படி ஏற்க முடியும்? குருபா சாதியை சேர்ந்த எங்களுக்கு ஆடு மேய்ப்பது தொழிலாக உள்ளது. எங்கள் இனத்தை இதுவரை இந்து மதத்தில் ஏற்கவில்லை. அந்த அளவிற்கு தீண்டாமை இங்கு உள்ளது. இந்த சட்டம் கண்டிப்பாக மக்களுக்கு உதவாது.” எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Karnataka, Religious conversion