கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! எடியூரப்பாவுக்கு சிக்கல்

கடந்த வியாழக்கிழமை டெல்லியில் அமித்ஷாவை எடியூரப்பா சந்தித்து பேசினார். அமித்ஷா ஒப்புதல் அளித்த 17 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

news18
Updated: August 20, 2019, 4:20 PM IST
கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! எடியூரப்பாவுக்கு சிக்கல்
எடியூரப்பா
news18
Updated: August 20, 2019, 4:20 PM IST
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றநிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அது எடியூரப்பாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் கடந்த மாதம் 26-ம் தேதி குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார்.  அப்போது முதல் சுமார் 20 நாட்களுக்கும் மேலாக அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை டெல்லியில் அமித்ஷாவை எடியூரப்பா சந்தித்து பேசினார். அமித்ஷா ஒப்புதல் அளித்த 17 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாக அதிருப்தி குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்தமுறை, பா.ஜ.கவைச் சேர்ந்த முக்கியமான பலருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்ராதுர்கா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ ஜி.எஃச்.திப்பாரெட்டி, ’என்னுடைய அனுவபத்தை கட்சி கணக்கில் கொள்ளவில்லை. என்னைப் போல அதிருப்தி மனநிலை உள்ள எம்.எல்.ஏக்கள் எடியூரப்பா சந்தித்து கோரிக்கைவைக்கவுள்ளோம்’ என்று தெரிவித்தார். திப்பா ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏக்கள், வாகனத்தின் டயர்களுக்கு தீ வைத்தும், கட்சி எதிராக குரல் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் பதவி அளிக்கப்படாதது குறித்து பேசிய தலித் தலைவரும் ஆறுமுறை எம்.எல்.ஏவுமான அங்காரா, ’கட்சி மீது இருந்த என்னுடைய ஈடுபாடும், கொள்கையும் கட்சித் தலைமையால் மதிக்கப்படவில்லை. இருப்பினும், நான் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன்’ என்று தெரிவித்தார்.

மற்றொரு பா.ஜ.க எம்.எல்.ஏ ஹூளிகாட்டி சேகர், ‘எனக்கும் மற்றும் சிலருக்கு அநீதி நடைபெற்றுள்ளது. என்னுடைய மாவட்டம் கட்சித் தலைமையால் நிராகரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

Loading...

ஆச்சர்யமாக, எடியூராப்பாவுக்கு நெருக்கமான உமேஷ் கட்டி, முருகேஷ் நிரானி, பாலசந்திரா ஜார்கிஹுளி, பசன்கவுடா பாட்டில் யாட்நால், கே.ஜி.போபைய்யா, எஸ்.ஆர்.விஸ்வநாத், அர்விந்த் லிம்பாவளி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.  முக்கியமான மாவட்டங்களான பழைய மைசூரு, மைசூரு, குடகு, சாமரஜனாகாரா, மாண்டியா, ஹாசன், பெங்களூரு ஊரகப் பகுதி, சிக்பல்லாபுரா ஆகிய முக்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதல் அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.

கர்நாடக அமைச்சரவையில் மொத்த 34 இடங்களில் இன்னமும் 14 இடங்கள் காலியாக உள்ளது. அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்கள் அடுத்த கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Also see:

First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...