முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக பாஜக எம்எல்ஏ மகன் லஞ்சம் வாங்கிய விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட சித்தராமையா கைது

கர்நாடக பாஜக எம்எல்ஏ மகன் லஞ்சம் வாங்கிய விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட சித்தராமையா கைது

காட்சிப்படம்

காட்சிப்படம்

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவி விலகக்கோரியும், பாஜக எம்.எல்.ஏ.வை கைது செய்யக்கோரியும் பெங்களூருவில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்றது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ-வின் மகன் லஞ்சம் வாங்கிய விவகாரத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கைது செய்யப்பட்டார்.

சோப்பு மற்றும் டிடர்ஜண்ட் நிறுவன தலைவரும், பாஜக எம்எல்ஏ-வுமான மாதல் விருபக்சப்பாவுக்கு டெண்டர் தொடர்பாக சிலர் லஞ்சம் தர முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி, 40 லட்சம் ரூபாயை விருபக்சப்பாவின் மகன் பிரஷாந்த் வாங்கியபோது, ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்த விவகாரத்தை அடுத்து சர்ச்சையில் சிக்கிய எம்எல்ஏ, சோப்பு தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவி விலகக்கோரியும், பாஜக எம்.எல்.ஏ.வை கைது செய்யக்கோரியும் பெங்களூருவில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சித்தராமையா, ரந்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

First published:

Tags: Karnataka