ஹோம் /நியூஸ் /இந்தியா /

புகாரளிக்க வந்த பெண்ணைக் கன்னத்தில் அறைந்த பாஜக அமைச்சர்! - வைரல் வீடியோ!

புகாரளிக்க வந்த பெண்ணைக் கன்னத்தில் அறைந்த பாஜக அமைச்சர்! - வைரல் வீடியோ!

கர்நாடக பா.ஜ.க அமைச்சர் வி.சோமண்ணா

கர்நாடக பா.ஜ.க அமைச்சர் வி.சோமண்ணா

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க அமைச்சர் பெண்ணை கை நீட்டி கன்னத்தில் அறைந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  கர்நாடக மாநிலத்தில் பாஜகவைச்  சேர்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வி.சோமண்ணா சனிக்கிழமை அன்று சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹங்கலா கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலம் வழங்குவதற்காகச் சென்றுள்ளார்.

  அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் அவரிடம் தனக்கு நிலம் கிடைக்கவில்லை என புகார் கூறினார். அதில் திடீரென்று கோபமடைந்த அவர் புகார் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். அதனையும் தாண்டி அந்த பெண் அவரின் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

  வெளியான வீடியோவில் புகார் கூற வந்த பெண்ணை அமைச்சரிடம் விடாமல் அதிகாரிகள் தடுப்பதும், அதனை மீறிச் சென்ற பெண்ணை அமைச்சர் அறைவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அமைச்சர் வி.சோமண்ணா மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது.

  Also Read : 10,000 அடி உயரத்தில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீபாவளியை கொண்டாடும் ராணுவ வீரர்கள்!

  இதேபோல கடந்த வருடம் சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசாமி, பெண் விவசாயி ஒருவர் பொது வெளியில் தாக்கினார். மேலும் கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி, சொத்து உரிமைக்காகப் போராடிய பெண்ணை தகாத வகையில் பேசிய வீடியோ பரவியது. தொடர்ச்சியாக பாஜகவினர் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது தொடர் கதையாகியுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: BJP, BJP MP, Karnataka