Home /News /national /

கர்நாடகாவில் பாஜக தொண்டரை வெட்டிக் கொன்ற மர்மகும்பல்.. தட்சிண கன்னடாவில் பதற்றம்

கர்நாடகாவில் பாஜக தொண்டரை வெட்டிக் கொன்ற மர்மகும்பல்.. தட்சிண கன்னடாவில் பதற்றம்

கர்நாடக பாஜக தொண்டர் கொலை

கர்நாடக பாஜக தொண்டர் கொலை

கர்நாடகாவில் பாஜக தொண்டர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவின், பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரவீன் நெட்டாரு. இவர் செவ்வாய் கிழமை இரவு தனது கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து, கோடாரி, அரிவாளால் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவீன் நெட்டாரு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொலை சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாஜக தொண்டர்களுக்கு, மாநில அரசு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டதாக கூறி, ஏராளமானோர் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். மாநில பாஜக தலைவர் நலின் குமார் கட்டீலின் காரை சுற்றி வளைத்து பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெட்டாருவின் உடலை அவரது இல்லத்திற்கு கொண்டு சென்ற போது நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் உடன் சென்றனர்.

    நெட்டாருவின் கொலையை கண்டித்து தட்சிண கன்னடாவின் பெல்லாரேவில் போராட்டம் நடத்திய பாஜக தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தட்சிண கன்னடா மற்றும் அண்டை மாவட்டமான உடுப்பியில் வன்முறை ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: BJP, BJP cadre, Karnataka

    அடுத்த செய்தி