கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்: 29 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

பதவியேற்கும் அமைச்சர்

கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் அமைச்சரவையில் இன்று 29 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

  • Share this:
    கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, கடந்த திங்கட்கிழமை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம், பெங்களூருவில் நடைபெற்றது. இதில், மேலிடப் பார்வையாளராக மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    எடியூரப்பாவும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான உரிமைக்கோரும் கடித்ததை வழங்கினார். ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 61 வயதான பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.

    சதாரா லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த அவர், கடந்த 2008-ம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்தார். அவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை, கர்நாடக முதலமைச்சராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 28-ம் தேதி பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் 29 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வி.சோமன்னா, உமேஷ் கட்டி, அங்காரா, ஜே.சி.மதுசுவாமி, அராகா ஜனேந்திரா, அஸ்வந்த் நாராயன், சி.சி.பாடில் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். எடியூரப்பா அமைச்சரவையில் துணை முதல்வர்களாக இருந்தவர்களுக்கு இம்முறை துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. பா.ஜ.க மேலிட உத்தரவின் காரணமாக யாருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: