கர்நாடக தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

news18
Updated: April 16, 2018, 7:36 AM IST
கர்நாடக தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
சித்தராமையா
news18
Updated: April 16, 2018, 7:36 AM IST
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12ம் தேதி வாக்குப்பதிவும், 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. காங்கிரஸ் , பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் 72 வேட்பாளர்கள் பெயர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டார். மேலும் சிகாரிபூரா தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். தற்போது  பாஜகவின் சார்பில் அமித்ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 218 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த இரண்டு தேர்தல்களாக நின்று வெற்றி பெற்ற வருணா தொகுதியில் இருந்து மாறி சாமூண்டிஸ்வரி தொகுதியில் போட்டியிட உள்ளார். அவரது மகனும், மருத்துவருமான யதீந்தரா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் பாஜக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்