3வது முறையாக கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் - ஆளும் கட்சிக்குள் கலகக் குரல் எழுப்பும் சக எம்.எல்.ஏக்கள்!

3வது முறையாக கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் - ஆளும் கட்சிக்குள் கலகக் குரல் எழுப்பும் சக எம்.எல்.ஏக்கள்!

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிலையில் அதிருப்தியில் உள்ள பிற பாஜக எம்,எல்.ஏக்கள் எடியூரப்பா மீதான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிலையில் அதிருப்தியில் உள்ள பிற பாஜக எம்,எல்.ஏக்கள் எடியூரப்பா மீதான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  • Share this:
கர்நாடகாவில் இன்று மேலும் 7 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் வஜூபாய் வாலா புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

எம்.எல்.ஏக்கள் உமேஷ் கட்டி, அங்கரா, முருகேஷ் நிரானி மற்றும் அரவிந்த் லிம்பவள்ளி ஆகியோரும், எம்.எல்.சிக்கள் சங்கர், எம்.டி.பி.நாகராஜ் மற்றும் யோகேஸ்வர் ஆகியோரும் இன்று அமைசச்ர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சரவை சகாக்கள், பாஜக தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளின் 17 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் அங்கு ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் ஜுலை 2019ல் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் 3வது முறையாக தற்போது அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.இதனையடுத்து புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிலையில் அதிருப்தியில் உள்ள பிற பாஜக எம்,எல்.ஏக்கள் எடியூரப்பா மீதான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான அமைச்சர்கள் பெங்களூரு மற்றும் பெலாகவி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், குறிப்பிட்ட பகுதிகளுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போயுள்ளதாகவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விஜயபுரா தொகுதி எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டில் யத்னல் கூறுகையில், முதல்வர் எடியூரப்பா தன்னை மிரட்டுபவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார். நேர்மையாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு இடம் அளிக்காமல் இருக்கிறார் எனவும் முதல்வரும் அவரின் குடும்பத்தினரும் கர்நாடகாவில் பாஜகவை
கடத்தியுள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த பசனகவுடா கூறும்போது, எடியூரப்பாவின் கீழ், தான் அமைச்சராக விரும்பவில்லை, நான் உங்களுக்கு (எடியூரப்பா) சவால் விடுக்கிறேன், இந்த மகர சங்கராத்திலிருந்து உங்களின் அரசியல் வாழ்க்கைக்கு அழிவு ஏற்படும். பிரதமர் மோடியின் கீழ் கர்நாடகாவில் புதிய சகாப்தம் பிறக்கும் என தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: