ராஜினாமா செய்த தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் பா.ஜ.க எம்.பி!

பணியில் இருந்தபோது, ஏதேனும் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தாரா என்று விசாரணை நடத்தப்படவேண்டும்.

ராஜினாமா செய்த தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் பா.ஜ.க எம்.பி!
அனந்தகுமார் ஹெக்டே
  • News18
  • Last Updated: September 10, 2019, 4:59 PM IST
  • Share this:
கர்நாடாகாவில் இந்திய குடிமைப் பணியில் இருந்து ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் பாகிஸ்தானுக்கு இடம்பெயர வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்டத்தில் துணை ஆணையராக பணியாற்றிவந்த தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ராஜினாமா செய்தார்.

ராஜினாமா கடிதத்தில், ‘பன்முகத் தன்மைகொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்துகொள்ளப்படும்போது, அரசு ஊழியராகப் பணி புரிவது தர்மமற்றது. வருங்காலத்தில் ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்கும் போக்கு அதிகரிக்கும்’ என்று குற்றம் சாட்டியிருந்தார். அவருக்கு முன்னதாக, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி ஐ.ஏ.எஸ் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தனர்.


சசிகாந்த் செந்தில்


இந்தநிலையில், கர்நாடக மாநில பா.ஜ.கவினர், ராஜினாமா செய்த சசிகாந்த் செந்திலை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். பா.ஜ.க தேசியச் செயலாளர் சந்தோஷ் ட்விட்டர் பதிவில், ‘சகிப்புத்தன்மையற்ற இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் யாருடன் தொடர்பு வைத்திருப்பார்கள். தேசம் உங்களை முழுமையா புரிந்துகொள்ளும்’ என்று விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் உட்ரா கன்னடா எம்.பியுமான அனந்தகுமார் ஹெக்டே, ‘சசிகாந்த் செந்தில் அவருக்கு ஆதரவு தெரிவிப்பர்களை அழைத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு இடம்பெயர வேண்டும்.

இதுதான் இயல்பான மற்றும் இறுதியான தீர்வு. இங்கிருந்து பிரிவினையைத் தூண்டுவதை விடவும் அங்கே சென்றுவிட்டு நமது அரசுக்கு எதிராகவும் நம்முடைய நாட்டுக்கு எதிராகவும் சண்டையிடட்டும். அவருக்கு யாருடன் தொடர்பு உள்ளது என்பதை ஆய்வு செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்த தக்சினா கன்னடா மாவட்ட பா.ஜ.க தலைவரும் புட்டுர் எம்.எல்.ஏவுமான சஞ்சீவ மடன்டூர், ‘சசிகாந்த் செந்தில் இடதுசாரி சிந்தனைகளைக் கொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பணியில் இருந்தபோது, ஏதேனும் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தாரா என்று விசாரணை நடத்தப்படவேண்டும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: September 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்