• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன மருத்துவக்கல்லூரி: 182 மாணவர்களுக்கு தொற்று உறுதி

கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன மருத்துவக்கல்லூரி: 182 மாணவர்களுக்கு தொற்று உறுதி

SDM Medical College

SDM Medical College

நவம்பர் 17ஆம் தேதியன்று புதிதாக கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக பிரெஷ்சர்ஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  • Share this:
மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 182 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கல்லூரி கோவிட் ஹாட்ஸ்பாட் ஆக மாறியிருக்கிறது.

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது நோய் மேலும் பரவாமல் தடுக்கவும், உயிரிழப்பை குறைக்கவும் உதவியிருக்கிறது. என்ற போதிலும் புதிதாக பரவி வரும் கொரோனா வகைகள் நாம் இன்னும் ஆபத்தில் இருந்து தப்பவில்லை என்பதை உணர்த்தி வருகிறது. எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு சமீபத்தில் குறைந்திருக்கும் மாநிலங்களுள் ஒன்றாக திகழும் கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாணவர்கள், பேராசிரியர்கள் என 182 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Also read:  உலகின் முதல் மிதக்கும் தற்சாற்பு நகரம் - 5 லட்சம் சதுரமீட்டரில் கடலில் ஒரு பிரம்மாண்டம்

கர்நாடகாவில் தர்வாத் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.டி.எம் மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பர் 17ஆம் தேதியன்று புதிதாக கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக பிரெஷ்சர்ஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 3,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு பின்னர் அக்கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவியதால், சந்தேகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் சுமார் 300 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

Also read:   குழந்தையின் உயிர்காக்க விஞ்ஞானியாக மாறிய தந்தை.. பள்ளிப்படிப்பை தாண்டாதவர் வீட்டிலேயே மருந்து தயாரித்து அசத்தல்..

பரிசோதனை முடிவுகள் அடுத்தடுத்து வெளியான நிலையில் நேற்று வரை அந்த கல்லூரியின் ஃபிரெஷர்கள் பார்ட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள், பேராசிரியர்கள் என 66 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்றைய நிலவரப்படி இந்த பாதிப்பு 66ல் இருந்து ஒரேயடியாக 182 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் என தெரியவந்திருக்கிறது. மேலும் இதில் பலரும் அறிகுறிகள் இன்றியும் சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்லூரியின் இரண்டு விடுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

Also read:  Netflix வெப்சீரிஸ் தொடர் பார்த்த வடகொரிய மாணவருக்கு ஆயுள் தண்டனை; ஒருவருக்கு மரண தண்டனை

கல்லூரியில் நடைபெற்ற ஃபிரெஷர்கள் பார்ட்டி கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறி பரவலுக்கு வித்திட்டுள்ளதாக தர்வாத் சுகாதாரத்துறை கமிஷனர் தெரிவித்தார். இன்று மேலும் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த இருப்பதாகவும் இதன் முடிவுகள் வெளியாகும் போது பாதிப்பின் அளவு மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதுதவிர பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை சேகரித்து மரபணு சோதனைக்காக அனுப்பி வைத்து இதில் யாருக்காவது புதிய வகை கொரோனா வேரியண்ட் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பணியும் நடைபெறுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: