கர்நாடகாவில் ஷேர் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து: 12 பேர் உயிரிழப்பு

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Web Desk | news18
Updated: July 4, 2019, 7:59 AM IST
கர்நாடகாவில் ஷேர் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து: 12 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் சாலை விபத்து
Web Desk | news18
Updated: July 4, 2019, 7:59 AM IST
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் டாடா ஏஸ் வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் சிந்தாமணி என்ற இடத்தில் இருந்து சிக்பள்ளாப்பூர் நகருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, முருகுமல்லா என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, எதிரே வந்த டாடா ஏஸ் ஷேர் ஆட்டோவின் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்து வந்த 3 பெண்கள் உள்பட 12 பேர் உடல் நசுங்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் டாடா ஏஸ் மீது தனியார் பேருந்து மோதி விபத்து


இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கோர விபத்து அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க...  கோவில் விழாவில் நடிகர் வடிவேலு ஆடல் பாடல்!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...