Home /News /national /

முகக்கவசம் அணியாததால் தானே முன்வந்து அபராதம் செலுத்திய காவல்துறை ஐ.ஜி

முகக்கவசம் அணியாததால் தானே முன்வந்து அபராதம் செலுத்திய காவல்துறை ஐ.ஜி

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் காவல்துறை ஐ.ஜி-யாகப் பணிபுரியும் மோஹித் அகர்வால் முகக்கவசம் அணியாததால் தானே முன்வந்து அபராதம் செலுத்தியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    கொரோனா தொற்று பரவலின் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பணி நிமித்தமான பர்ரா எனும் பகுதிக்குச் சென்ற மோஹித் அகர்வால் எனும் காவல்துறை ஐ.ஜி, முகக்கவசம் அணியாமல் தனது வாகனத்திலிருந்து இறங்கியுள்ளார். உடன் வந்த அரசு அதிகாரிகளிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் முகக்கவசம் அணியாமல் இருந்தது அவரது நினைக்கு வந்துள்ளது. உடனே தனது வாகனத்தில் இருந்த முகக்கவசத்தை எடுத்து அணிந்துள்ளார்.

    அதை அணியாமல் இருந்ததற்கான அபராதத்தைச் செலுத்துவது பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் முன்மாதிரியாக இருக்கட்டும் என்றும் அதை அறம் சார்ந்த ஒன்றாக தான் கருதுவதாகவும் கூறியுள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அம்மாநில அரசு 100 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு மிகவும் கண்டிப்பாக உள்ளது. யாரேனும் பாதுகாப்பு வழிகாட்டுதலை மீறினால் குற்றம் இழைத்ததாகக் கருதப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: CoronaVirus, Lockdown, Uttar pradesh

    அடுத்த செய்தி