கேரளாவில் உள்ள கன்னூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் வலதுசாரி சிந்தனைவாதிகளான சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலத்தில் உள்ள கன்னூர் பல்கலைக்கழகத்தின் எம்ஏ நிர்வாகம் மற்றும் அரசியல்.துறையின் 3வது செமஸ்டர் பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைவாதிகளான சாவர்க்கர்,கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக கேரள மாணவர் அமைப்பு(KSU), கேரள இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு (MSF) ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டன. பாடத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கே.எஸ்.யூ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து கன்னூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவிந்திரன் விளக்கமளித்தார். ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், உரைகளை புறந்தள்ளவும் முடியும், அவற்றை தடை செய்யவும் முடியாது. அவை படிக்கப்பட வேண்டும், அதன் பின்னர் அவற்றை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். அரசியல் பாடப்பிரிவை கன்னூர் பல்கலைக்கழகம் காவி மயமாக்குவதாக கூறப்படுவது தவறு. பாடத்திட்டத்தை தயாரித்தவர்கள் பல்வேறு இயக்கங்களின் தொடக்க உரைகளையும் இணைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கன்னூர் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவிந்திரனின் விளக்கத்தை அம்மாநில கல்வி அமைச்சர் ஆர்.பிந்து கோரியுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் “ சுதந்திர போராட்டத்தை புறக்கணிந்த எந்த சித்தாந்தத்தையும் தலைவர்களையும் பெருமைப்படுத்த மாட்டோம் என்பதில் தாங்கள் தெளிவாக உள்ளோம். யாரும் அதை செய்ய மாட்டார்கள்.
இதையும் படிங்க: நாளை நடக்கவுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு?
சில நேரங்களில், பிற்போக்கு சித்தாந்தங்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால் அத்தகைய சித்தாந்தங்களையும் அந்த கருத்துக்களை நிலைநிறுத்திய தலைவர்களையும் யாரும் புகழக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய இரண்டு நபர் கமிட்டியை பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. அவர்களின் பரிந்துரைப்படி பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.