ஹோம் /நியூஸ் /இந்தியா /

காரில் சாய்ந்த சிறுவன் மீது சரமாறி தாக்குதல்... கொலை வழக்கில் உரிமையாளர் கைது

காரில் சாய்ந்த சிறுவன் மீது சரமாறி தாக்குதல்... கொலை வழக்கில் உரிமையாளர் கைது

சிறுவனை தாக்கிய இளைஞர் கைது

சிறுவனை தாக்கிய இளைஞர் கைது

Kannur car incident - எதிர்பாராத தாக்குதலுக்கு ஆளான அச்சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kannur, India

  கார் மீது சாய்ந்து கொண்டிருந்த ஆறு வயது சிறுவனை காரின் உரிமையாளர் ஆத்திரத்தில் வேகமாக எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவரை காவல்துறை கைது செய்துள்ளது.

  கேரளா மாநிலம் கன்னூர் அருகே உள்ள தலசேரி என்ற பகுதியில் ஸ்ரீஷத் என்ற வாலிபர் தனது காரை நிறுத்தி வைத்து அதில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கணேஷ் என்று ஆறு வயது சிறுவன் காரின் மீது இயல்பாக சாய்ந்து கொண்டு நின்றுள்ளான். இந்த சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக கேரளா வந்த புலம்பெயர் தொழிலாளர்களின் மகனாவார்.

  இந்நிலையில், தனது காரில் அச்சிறுவன் சாய்ந்து கொண்டு நின்றதை கண்டு பொறுக்காமல், காரில் இருந்து இறங்கி வந்த அதன் உரிமையாளர் ஸ்ரீஷத் ஆத்திரத்தில் அச்சிறுவனின் இடுப்பு பகுதியில் எட்டி உதைத்தார்.

  அச்சிறுவன் வலியில் பயத்துடன் பின் நகர்ந்து ஓரமாக சென்ற நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் ஸ்ரீஷத் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்டித்து கேள்ளி எழுப்பினர். ஆனால், அதை சட்டை செய்யாமல் அங்கிருந்து கிளம்பினார் ஸ்ரீஷத்.

  இதையும் படிங்க: ஆதார் இல்லாததால் கர்நாடகாவில் தமிழக கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு.... தாயும், இரட்டை சிசுவும் உயிரிழப்பு

  இந்நிலையில், இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதற்கு கேரளா மாநில அமைச்சர்கள், மாற்று கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஸ்ரீஷத் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்பாராத தாக்குதலுக்கு ஆளான அச்சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Car, Kerala, Viral Video