முகப்பு /செய்தி /இந்தியா / நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலைப் பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம்

நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலைப் பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம்

புனித் உடலைக் காண குவிந்த ரசிகர்கள்

புனித் உடலைக் காண குவிந்த ரசிகர்கள்

நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

  • Last Updated :

நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கண்டீவரா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய நடிகர் புனித் ராஜ்குமாருக்கு நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட, பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில், மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஐசியூவில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று (அக் 29) மதியம் காலமானார். புனித் ராஜ்குமாரின் இந்த திடீர் மறைவு அவரது குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விபட்டதும் அவரது ரசிகர்கள் மருத்துவமனை முன்பாக குவியத் தொடங்கினர். இந்நிலையில் அவரது மறைவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

top videos

    புனித் ராஜ்குமாரின் உடல் இரவு 7 மணி வரை சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அவரது உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கண்டீவரா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. புனித் குமாரின் உடலை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். மைதானம் முன்பு காத்திருந்த ரசிகர்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

    First published:

    Tags: Actor, Death, Heart attack, Karnataka, Puneet Rajkumar