முகப்பு /செய்தி /இந்தியா / கனமழையால் சேதமடைந்த காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதை - மீட்டெடுக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே!

கனமழையால் சேதமடைந்த காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதை - மீட்டெடுக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே!

காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதை

காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதை

Trending | காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதை என்பது தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட 971 பாலங்களும், 2 சுரங்கங்களும் அமைந்துள்ளது.

  • Last Updated :
  • Himachal Pradesh, India

இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் இயற்கை எழில் கொஞ்சும் காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதை வரலாறு காணாத சேதமடைந்துள்ள நிலையில் இதனை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்திய வடக்கு ரயில்வே ஈடுபடவுள்ளதாக ட்விட் செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள சிறப்புகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொன்றும் பிரம்பை ஏற்படுத்தும் விஷயங்களாகவே இருக்கும். அவற்றில் ஒன்று தான் காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதை. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகோடு ஏராளமான கோவில்கள் உள்ளதால் ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான யாத்திரிகள் இங்கு வருவது வழக்கம். இதோடு மட்டுமின்றி காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதை என்பது தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட 971 பாலங்களும், 2 சுரங்கங்களும் அமைந்துள்ளது. பதான்கோட் மற்றும் ஜோகிந்தர் இடையே 163 கிமீ தூரம் வரை மலைகளுக்குள் பயணம் செய்யும் அற்புதம் இதில் உள்ளது.

இப்படி பல்வேறு சிறப்புகளைத் தன் வசம் கொண்டுள்ள காங்கரா ரயில் சேவை கடந்த ஜுலை 31 ஆம் தேதி பெய்த கனமழையால் முற்றிலும் சேதமடைந்துள்ளது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இமாச்சலில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி மேக வெடிப்பின் காரணமாக கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்ததோடு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

Read More : பாலைவனத்தில் பூக்களா? பூத்துக்குலுங்கும் அட்டகாமா பாலைவனம்.... கண்ணைக் கவரும் காட்சிகள் !

இந்நிலையை சரிசெய்ய மாநில பேரிடர் மேலாண்மை முயன்ற நேரத்தில் தான், மக்களுக்கு விருப்பமான காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதை சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து பருவமழையால் காங்க்ராவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜுலை 31ம் தேதி பெய்த கனமழையால் அப்பகுதியில் நிலச்சரிவுகள், பாறைகள் சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக பதான்கோட் – ஜோகிந்தர்நகர் இடையே உள்ள காங்க்ரா பள்ளத்தாக்கு பாரம்பரிய ரயில் பாதை மற்றும் பாலங்கள் பல இடங்களில் மோசமாக சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து இந்திய வடக்கு ரயில்வே நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய ரயில்வே தனது பயனர்களுக்கு பாதுகாப்பான, பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் சேவையை வழங்குவதில் முதன்மையான கவனம் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தனர். மேலும் காங்கரா பள்ளத்தாக்கு ரயில் பாதை மற்றும் பாலம் 32-ன் சேதமடைந்த பகுதியின் பழுது/ மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறுகிய காலத்தில் பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

top videos

    இதோடு நூர்பூர் சாலை முதல் டல்ஹவுசி சாலை வரையிலான சாலைப் பாலம் சில சேவைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில் சேவைகளை கட்டம் மற்றும் பிரிவு வாரியாக இயக்குவதற்கான அட்டவணை சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான செயல் திட்டத்தையும், பாலம் 32 இன் பழுது மற்றும் புனரமைப்புக்கான செயல் திட்டத்தையும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்துள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Himachal, India, Viral