வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சோகமானது, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது என்று கூறியுள்ள நடிகை கங்கனா ரனாவத், சர்வாதிகாரம் தான் ஒரே தீர்வு என்று தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவெற்றியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சட்டங்கள் அமலுக்கு வந்தன. எனினும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. இதுவரை 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். பிரதமரின் முடிவை பாராட்டியுள்ளனர். அதேவேளையில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது சோகமானது, வெட்கக்கேடாது மற்றும் நியாயமற்றது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சோகம், அவமானம், முற்றிலும் நியாயமற்றது. நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல், தெருக்களில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், இதுவும் ஜிஹாதி தேசம்தான். இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104வது பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்டிருந்த பதிவில், தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது சர்வாதிகாரம் மட்டுமே ஒரே முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மனைவியுடன் 26 நாடுகள்: சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற கேரள டீக்கடைக்காரர் காலமானார்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farm laws, Kangana Ranaut, PM Modi