’சீனாவின் கைப்பாவை ட்விட்டர்.. டிக்டாக்கை போல் நீங்களும் தடை செய்யப்படுவீர்..’ - கங்கனா ரனாவத் ட்வீட்

கங்கனா ரனாவத்

“சீனாவின் கைப்பாவையாக செயல்படும் ட்விட்டர் எனது ட்விட்டர் கணக்கை நீக்குவதாக மிரட்டுகிறது. நான் எந்த விதிகளையும் மீறவில்லை. டிக்டாக்கைப் போலவே ட்விட்டரும் இந்நாட்டில் முடக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார் கங்கனா ரனாவத்.

 • Share this:
  வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் ‘போலீஸாருடன் விவசாயிகள் மோதல்- புதுடெல்லியில் இண்டெர்நெட்டை கட்’ என்ற சிஎன்என் செய்தியைப் பகிர்ந்து பாப் பாடகி ரிஹானா ‘நாம் ஏன் இது பற்றி பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பெர்க், முன்னாள் போர்ன் ஸ்டார் மியா கலிஃபா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பியிருந்தனர்.

  இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் ரிஹானாவுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பதிலளித்து வருகின்றனர். ரிஹானாவுக்கு நடிகை கங்கனா ரனாவத், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, நடிகர் அக்‌ஷய் குமார் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  மத்திய அரசின் வெளியுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆளுமைகள் மற்றும் நடிகர்களின் ட்வீட் விவசாயிகள் போராட்டத்தில் எந்த தெளிவும் இல்லாமல் போடப்படுகிறது எனவும் இது சரியான செயல்பாடு அல்ல எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரிஹானா, க்ரேட்டா தன்பெர்க் பதிவுகளுக்கு எதிராக பாலிவுட்டில் இருந்தும் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் இருந்தும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

  மேலும் படிக்க : உங்கள் ஹீரோக்களை கவனமாக தேர்ந்தெடுங்கள், எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் - விவசாயிகளுக்கு ஆதரவாக சித்தார்த் ட்வீட்..
  ரிஹானா டுவிட்டுக்கு பதில் தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்” என மிகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ட்வீட் செய்திருந்தார்.   

  மேலும் தொடர்ச்சியாக விவசாயிகளை ஆதரித்து ட்வீட் செய்யும் பலருக்கு எதிராகவும் கங்கனா தீவிரமாகச் சாடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ட்வீட் செய்துவந்த நிலையில்,  புதிய வேளாண் சட்டம் தொடர்பாக, கங்கனா வெளியிட்டிருந்த சில பதிவுகளை, டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. கங்கனா ரனாவத் விதிகளை மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  இந்த நடவடிக்கையைக் குறித்து ட்வீட் செய்துள்ள கங்கனா ரனாவத், “சீனாவின் கைப்பாவையாக செயல்படும் ட்விட்டர் எனது ட்விட்டர் கணக்கை நீக்குவதாக மிரட்டுகிறது. நான் எந்த விதிகளையும் மீறவில்லை. டிக்டாக்கைப் போலவே ட்விட்டரும் இந்நாட்டில் முடக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Gunavathy
  First published: