அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஓடும் கமாங்க் ஆற்றின் நீர் (Kameng river), திடீரென்று கருப்பாக மாறியது. மேலும், ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் சொத்து மிதந்தன. சீனாவின் செயலே இதற்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கமாங்க் மாவட்டத்தில் கமாங்க் ஆறு கூடுகிறது. நேற்று காலை திடீரென நதியின் நிறம் கருப்பாக மாறியது. ஆயிரக்கணக்கான மீன்கள் ஆற்றில் செத்து மிதந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆற்று நீரின் தரம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தனர்.
இதில், அதிகளவில் கழிவுப் பொருட்கள் ( total dissolved substances (TDS)) கலந்துள்ளதால் நீர் மாசடைந்து, மீன்கள் இறந்துள்ளது, சோதனையில் தெரிந்தது. பொதுவாக ஒரு லிட்டர் நீரில் 300-1,200 mg வரை கழிவுப் பொருட்கள் இருக்கும் ஆனால் கமாங்க் ஆற்றின் ஒரு லிட்டர் நீரில் 6,800 mg கழிவுப் பொருட்கள் இருப்பதாக மாவட்ட மீன்வள மேம்பாட்டு அலுவலர் (DFDO) ஹாலி தாஜோ தெரிவித்தார். இதையடுத்து, கமாங்க் ஆற்று மீனை யாரும் சாப்பிட வேண்டாம்' என மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
எனினும் ஆற்று நீர் மாசு அடைந்து வருவதற்கு சீனாவே காரணம் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். காற்று நீர் கருப்பாக மாறியதாக கூறப்படும் செப்பா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள சீனா, கட்டுமான கழிவுகளை கமாங்க் ஆற்றில் அதிகளவில் கொட்டுவதாகவும் இதனால்தான் கமாங்க் ஆற்று நீர் மாசடைந்ததுளதாகவும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நாட்டில் தற்கொலை செய்துகொண்ட விவசாய கூலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
செப்பா கிழக்கு எம்எல்ஏ தபுக் தாகு, கமாங்க் ஆற்றின் நீரின் நிறத்தில் திடீர் மாற்றம் மற்றும் அதிக அளவு மீன்கள் இறந்ததன் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய நிபுணர்கள் குழுவை உடனடியாக அமைக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.