காவ் விஞ்ஞான் பிரச்சார் என்னும் பசு அறிவியல் தேர்வு, நாடு முழுவதும் இம்மாதம் 25-ஆம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது. இத்தேர்வு குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விலங்குகள் நல வாரியம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்களும் தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
பசுக்களை கொல்வதை தவிர்க்கவும் ,பசுக்கள் மூலம் கிடைக்கும் பொருளாதார பலன்களை நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல "பசு அறிவியல் தேர்வை மத்திய அரசு நடத்த உள்ளது" "காமதேனு காவ் விக்யான் பிரச்சார் "என்று இத்தேர்வுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது வருகின்ற 25-ஆம் தேதி நாடு முழுவதும் 12 மொழிகளில் ஆன்-லைன் வழியில் இந்த தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
மத்திய அரசின் கால்நடை மற்றும் மீன்வள அமைச்சகத்தின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட "ராஷ்டிரிய காமதேனு ஆயோக்" என்னும் அமைப்பு இந்த தேர்வினை நடத்துகின்றது இந்தியாவில் 300 மில்லியன் பசுக்கள் மற்றும் எருமை மாடுகள் உள்ளதாக மத்திய அரசின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது அந்த வகையில் பசுக்களின் மூலமாக கிடைக்கும் பொருளாதார பலன்களை மாணவர்கள் பொது மக்களிடம் கொண்டு செல்லவும் பால் தருவதை பசுக்கள் நிறுத்திய பிறகு அவற்றை கொல்வதை தவிர்த்து பசுக்கள் மூலமாக வேளாண்மை மற்றும் இதர துறைகளுக்கு பயன்படக் கூடிய பொருட்களை தயாரிக்க முயற்சி கொள்ள வேண்டும் என்கிற குறிக்கோளை வலியுறுத்துவதே இந்த தேர்வின் நோக்கமாகும்.
மொத்தம் 1 மணிநேரம் விடைகளை தேர்ந்தெடுத்து பதிலளிக்க கூடிய வகையில் 100 கேள்விகள் பசுக்கள் தொடர்பாக இடம்பெறும்
5 முதல் 8-ஆம் வரை உள்ள மாணவர்களும் 9 முதல் 12-ஆம்வகுப்பு மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து கல்லூரி மாணவர்களிடையே தெரியப்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பரிசுகள், சான்றிதழ்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anti cow slaughter bill, Cow science, Cow Slaughter, Kamdhenu Gau Vigyan Prachar