ஹோம் /நியூஸ் /இந்தியா /

2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணியா ? - ராகுல் மேடையில் கமல் கொடுத்த விளக்கம்!

2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணியா ? - ராகுல் மேடையில் கமல் கொடுத்த விளக்கம்!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

Kamal joda yatra speech | மக்களுக்காகவே தான் அரசியல் பயணத்தை தொடங்கினேன், எனக்காக அல்ல - கமல்ஹாசன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

அரசியலைப்பு சட்டத்துக்கு நெருக்கடி வந்தால் தெருவில் வந்து போராடுவேன், அதற்காக தான் டெல்லி வந்தேன் என கமல்ஹாசன் பேசியுள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானாவைத் தொடர்ந்து 108வது நாளாக ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் டெல்லியை சென்றடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்படி காங்கிரஸ் தரப்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற கமல்ஹாசன் டெல்லிக்கு சென்று ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றார்.

கமல்ஹாசனுடன் டெல்லி வாழ் தமிழர்கள், கட்சி தொண்டர்கள் ஆகியோர் நடை பயணத்தை மேற்கொண்டனர். டெல்லி ஐடிஓ பகுதியில் இருந்து ராஜ்காட் வரையிலான நடை பயணத்தில் ராகுல்காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன் மற்றும் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், தமிழர்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்த நடைபயணத்தில் பேசிய கமல்ஹாசன்,  “என்னுடைய தந்தையும் காங்கிரஸ்காரர்தான் என தெரிவித்தார். பலரும் தேர்தல் கூட்டணி  குறித்து கேட்கிறார்கள். ஆனால், நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன்; எனது அரசியல் பயணத்தை மக்களுக்காகதான் தொடங்கினேன்;  எனக்காக அல்ல” என தெரிவித்தார்.

மேலும்,  “எந்த கட்சி ஆளுகிறது என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. அரசியலமைப்பு சட்டத்துக்கு நெருக்கடி வந்தால் தெருவில் வந்து நின்று போராடுவேன். அதற்காகவே தான் டெல்லி வந்தேன்” என பேசினார்.

First published:

Tags: Delhi, Kamalhaasan, Rahul gandhi