ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற கமல்ஹாசன்!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற கமல்ஹாசன்!

டெல்லியில் நடிகர் கமல்ஹாசன்

டெல்லியில் நடிகர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பாரத் ஜோடோ யாத்திரைக்கு வாழ்த்து தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

டெல்லியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் பங்கேற்றுள்ளார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று கலந்துகொள்ளவிருப்பதாக சமீபத்தில் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப வீடியோ மூலம் பேசிய கமல், தலைநகரில் வாழும் தமிழர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இது தேசத்திற்கான நடை பயணம், கட்சிகளுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள கமல்ஹாசன் ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழா: பரபரப்பாக தயாராகும் மேடை... கியூட்டாக வந்த ராஷ்மிகா... பட்டைய கிளப்பும் தமன்

முன்னதாக சனி, ஞாயிறு என இரண்டு தினங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொள்வது வழக்கம் என்பதால் இந்த வாரம் பிக்பாஸில் கமல் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கான பிக்பாஸ் படப்பிடிப்பும் நேற்றே முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பாரத் ஜோடோ யாத்திரைக்கு வாழ்த்து தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்ஹாசனுடன் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் உட்பட 40,000 முதல் 50,000 பேர் வரை பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் தீன தயாள் உபாத்யாய் சாலையில் உள்ள டெல்லி காங்கிரசின் மாநில அலுவலகத்தில் இருந்து நடைபயணத்தில் பங்கேற்றுள்ளார். கமல் ஹாசன் உடன் டெல்லிவாழ் தமிழர்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 1000 பேர் ராகுலின் யாத்திரையில் இணைந்துள்ளனர்.

First published:

Tags: Congress, Kamal Haasan, Rahul gandhi