ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் பங்கேற்பார் என மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மவுரியா தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின்பாரத் ஜோடோ யாத்திரை 100 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொடங்கிய இந்த யாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க : பிரதமர் மோடி குறித்த விமர்சனம் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாக குழு செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளருடன் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை ஈடுபட்டார். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் துணை தலைவரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மவுரியா, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் டெல்லியில் வரும் 24ம் தேதி கலந்துகொள்கிறார் என கூறினார்.
மேலும், ஜனநாயகத்தை பாதுகாக்க ராகுல் காந்தி யாத்திரையில் கமல் கலந்து கொள்ள இருப்பதாக விளக்கமளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Kamal Haasan, Makkal Needhi Maiam, RahulGandhi