முகப்பு /செய்தி /இந்தியா / கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு.. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தலின் படி வழக்கை திரும்பப் பெற்ற தந்தை

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு.. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தலின் படி வழக்கை திரும்பப் பெற்ற தந்தை

வழக்கை திரும்பப் பெற்று உயர்நீதிமன்றத்தை நாடுங்கள் என மாணவியின் தந்தைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

வழக்கை திரும்பப் பெற்று உயர்நீதிமன்றத்தை நாடுங்கள் என மாணவியின் தந்தைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

வழக்கை திரும்பப் பெற்று உயர்நீதிமன்றத்தை நாடுங்கள் என மாணவியின் தந்தைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கள்ளக்குறிச்சி 12ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் பிஎஸ் நரசிம்மா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆஜரானார்.

இந்நிலையில், மாணவியின் தந்தை தரப்பு தங்களது தேர்விலான மருத்துவ நிபுணர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதற்கு, நீதிபதிகள் நீங்கள் கூறும் மருத்துவர்கள் குழுவை ஏன் நியமிக்க வேண்டும்,ஏற்கனவே உயர்நீதிமன்ற மருத்துவர்கள் குழுவை நியமித்துள்ளது, அவர்களை எவ்வாறு குறை கூறமுடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் தங்கள் தரப்பு வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், இதில் பாதிக்கப்பட்டது நாங்கள் தான். உரிய நியாயமான விசாரணையை தமிழ்நாடு அரசு செய்யவில்லை என மாணவி தந்தை குற்றச்சாட்டினார்.மேலும்,அவர்களது மருத்துவ நிபுணர்கள் குழு மீது முழுமையான நம்பிக்கை இல்லை  மாணவி தந்தையின் தரப்பு வாதத்தை வைத்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இரண்டாவது பிரேத பரிசோதனை நடக்கும் போது மாணவியின் பெற்றோர்கள் அந்த இடத்தில் இல்லை என தந்தை ராமலிங்கம் தரப்பு வாதம் முன்வைத்தது. பிரேத பரிசோதனை குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறுவதாக உங்களுக்கு தகவல் வழங்கப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: Exclusive | ஆசிரியர்கள் டார்ச்சர் - கள்ளக்குறிச்சி மாணவி எழுதிய கடிதம் வெளியானது

அதற்கு தந்தை தரப்பு தங்களுக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தாங்கள் சென்னையில் இருந்ததால், குறிப்பிட்ட நேரத்துக்குள் கள்ளக்குறிச்சி செல்ல முடியவில்லை என்றனர். நீங்கள்  உயர்நீதிமன்றத்தில் இவை அனைத்தையும் கூறலாமே, உயர்நீதிமன்றத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கை திரும்பப் பெற்று உயர்நீதிமன்றம் செல்லுங்கள் அல்லது வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதி கூறினார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை வழக்கை திரும்ப பெற்றார்.

First published:

Tags: Girl dead, Kallakurichi, Supreme court