முகப்பு /செய்தி /இந்தியா / குஜராத் மாநிலத்தின் முக்கிய பதவிகளை அலங்கரிக்கும் தமிழர்கள்!

குஜராத் மாநிலத்தின் முக்கிய பதவிகளை அலங்கரிக்கும் தமிழர்கள்!

ஐஏஎஸ் அதிகாரிகள்

ஐஏஎஸ் அதிகாரிகள்

பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோதும் கைலாசநாதன் முதன்மை செயலாளராகவும் பதவியில் இருந்ததுடன் முக்கிய முடிவுகளையும் அவர் எடுத்து வருகிறார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் மாநிலத்தின் முக்கிய பதவிகளை தமிழர்கள் அலங்கரித்து வருகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வரும் மாநிலமாக குஜராத் திகழ்ந்து வருகிறது. அந்த மாநிலத்தின் முதன்மை செயலாளராக கேரளாவைச் சேர்ந்த கைலாசநாதன் உள்ளார். இவர் பிறந்தது கேரளாவாக இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் கல்வி பயின்றுள்ளார். 13 ஆண்டுகளாக அவருக்கு பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோதும் கைலாசநாதன் முதன்மை செயலாளராகவும் பதவியில் இருந்ததுடன் முக்கிய முடிவுகளையும் அவர் எடுத்து வருகிறார். இதேபோல் அகமதாபாத் மாநகராட்சியின் ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரியான தென்னரசன் இருந்து வருகிறார்.

சபர்மதி ஆற்றை 1,500 கோடியில் தூய்மை செய்து தற்போது முக்கிய சுற்றுலா தளமாக மாற்றிக்காண்பித்துள்ளார் தென்னரசன். இதே போல பிரதமர் மோடியின் சொந்த ஊரான மகேசன மாவட்டம் வாட் நகரில் மாவட்ட ஆட்சியராக நாகராஜ் ஐ.ஏ.எஸ் உள்ளார். இதேபோல் வருவாய் துறை செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சொரூப். சிறு,குறு மேம்பாட்டு துறை செயலாளராக ரஞ்சித் ஐ.ஏ.எஸ் ஆகியோர் உள்ளனர்.

First published:

Tags: Government officers, Gujarat, Tamils