முகப்பு /செய்தி /இந்தியா / மரணத்தின் விளிம்பில் இருந்து திரும்பியுள்ளேன் – ஆப்கானில் இருந்து திரும்பிய கேரள இளைஞர்

மரணத்தின் விளிம்பில் இருந்து திரும்பியுள்ளேன் – ஆப்கானில் இருந்து திரும்பிய கேரள இளைஞர்

திதில் ராஜீவன்

திதில் ராஜீவன்

என்னைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால் நான் உங்களை விட்டு பிரிந்துவிட்டு என நினைத்துக்கொள்ளுங்கள் என உறவினருக்கு தெரிவித்தேன்.

  • 1-MIN READ
  • Last Updated :

தாலிபான்கள் எங்களது பேருந்தை சிறை செய்ததும் எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன் என கண்ணீருடன் ஆப்கானில் இருந்து திரும்பிய நிமிடங்களை விவரிக்கிறார் கேரள இளைஞர்.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர்  திதில் ராஜீவன். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக ஆப்கான் சென்றுள்ளார்.  தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து மிகுந்த சிரமங்களை சந்தித்து தற்போது கேரளா திரும்பியுள்ளனர்.  காபூலில் இருந்து விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டார். டெல்லியில் இருந்து கோவா வழியாக கண்ணூர் அடைந்துள்ளார்.

Also Read: ஆப்கனுக்கு உக்ரைன் மக்களை மீட்கச் சென்ற பயணிகள் விமானம் ஈரானுக்கு கடத்தல்!

தாலிபான்கள் வசம் ஆப்கான் சென்றபின்னர் அங்கிருந்த நாள்கள் குறித்து விவரித்துள்ளார், “கடந்த ஒருவாரமாக ஆப்கானில் எங்களது வாழ்க்கை மிகவும் பதட்டமானதாக இருந்தது. டெல்லிக்கு வந்த பின்னர்தான் பாதுகாப்பாக உணர்ந்தேன். நாங்கள் மொத்தம் ஒரு 150 பேர் 6 பேருந்துகளில் காபூல் விமானநிலையம் நோக்கி விரைந்தோம். நாங்கள் பயணித்த பேருந்துகளை தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்துகளை காலியாக உள்ள இடத்துக்கு அழைத்து சென்று எங்களது ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்டை சரிபார்த்தனர். எங்களது மொபைல்போன்களை வாங்கி பார்த்தனர்.

Also Read:  தாலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் பஞ்ஷிர் நாயகன் சரண் அடைகிறாரா?

பெண்கள் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் முதலில் போக அனுமதித்தனர். அதன்பின்னர் தான் இந்தியர்களை விடுவித்தனர். சுமார் 6 மணி நேரம் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் பிணைக்கைதிகளாக இருந்தோம்.தாலிபான்கள் எங்களை பிடித்தபோது எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்தேன். மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பி வந்துள்ளேன். இது எனக்கு இரண்டாவது பிறவி என்றுதான் சொல்ல வேண்டும். தாலிபான்கள் பிடியில் சிக்கியது பற்றி அம்மாவுக்கு சொல்லவில்லை. இந்தியா திரும்பியதும்தான் டெல்லியில் இருந்து போன் செய்து பேசினேன்.

ஆப்கானியர்கள் அச்சத்தில் உள்ளனர். தாலிபான்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனக் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தானில் வேலை செய்ய விரும்புபவர்கள் இங்கேயே தங்கிக்கொள்ளலாம் என்கின்றனர். ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எல்லோரும் அங்கிருந்து வெளியேறவே விரும்புகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் கழிவறைக்கு செல்லும் போதுதான் எனது உறவினருடன் போனில் பேச முடிந்தது. அவரை தொடர்புக்கொண்டு எனது நிலைமையை கூறினேன். என்னைப்பற்றி மேற்கொண்டு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால் நான் உங்களை விட்டு பிரிந்துவிட்டு என நினைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினேன்.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் பதற்றம் நிறைந்ததாக இருந்தபோதிலும் காபூல் பாதுகாப்பானதாக இருந்தது. இங்குள்ள நிறுவனங்களும் இயங்கிக்கொண்டிருந்தன. அதனால் தான் இங்கு இத்தனை காலம் வெளிநாட்டினர் வேலை செய்து வந்தனர். ஆனால் காபூலுக்குள் தாலிபான்கள் திடீரென நுழைந்ததால் வெளிநாட்டவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. நான் இந்தியா வந்துசேருவதற்கு மத்திய அரசும், கேரள மாநில அரசு, வெளியுறவுத்துறை அதிகாரிகளும் துணையாக இருந்தனர்.”என்றார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Afghanistan, Airport, Kerala, News On Instagram, Taliban, Youths