ஹோம் /நியூஸ் /இந்தியா /

போய்கிட்டே இரு.. அரசு பேருந்தை துரத்திய கபாலி யானை.. 8 கி.மீ. தூரம் ரிவர்ஸில் சென்ற பேருந்து!

போய்கிட்டே இரு.. அரசு பேருந்தை துரத்திய கபாலி யானை.. 8 கி.மீ. தூரம் ரிவர்ஸில் சென்ற பேருந்து!

யானை

யானை

Kerala elephant | பின்னால் வந்த பேருந்தை ஆக்ரோஷமாக 8 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்ற கபாலியானையால் பொதுமக்கள் அச்சம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் அரசு பேருந்தை துரத்திய கபாலியானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூர் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுயானைகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களில் கபாலி யானை மற்றும் கொம்பன் யானையின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளது.

அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மலாக்காப்பாறை வனப்பகுதியில் பயணிகள் ஏற்றிகொண்டு சென்றது. அப்போது செல்லும் வழியில் பேருந்து முன்னாடி கபாலி யானை சென்றதை கண்டு பேருந்து ஓட்டுநர் அச்சமடைந்தார்.

இதையும் படிங்க | சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை நடைதிறப்பு.. ஆன்லைன் புக்கிங் அவசியம்.. தேவசம்போர்டின் முக்கிய அறிவிப்புகள்!

யானை மெதுவாக சென்று கொண்டிருந்ததால், ஓட்டுநரும் யானையின் பின்னாடியே மெதுவாக சென்று கொண்டிருந்தார். திடீரென கோபமடைந்த யானை, பின்னாடி வந்த பேருந்தை ஆக்ரோஷமாக துரத்தியது. இதில் பேருந்து ஓட்டுநர் யானைக்கு பயந்து பின்னோக்கியே பேருந்தை இயக்கினர்.

இதனை பயன்படுத்திய யானை 8 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்தை துரத்தி வந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Anupriyam K
First published:

Tags: Elephant, Kerala