முகப்பு /செய்தி /இந்தியா / போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே பயங்கரம்: கபடி வீரர் சுட்டுக்கொலை

போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே பயங்கரம்: கபடி வீரர் சுட்டுக்கொலை

சுட்டுக்கொல்லப்பட்ட கபடி வீரர் சந்தீப் நங்கல்

சுட்டுக்கொல்லப்பட்ட கபடி வீரர் சந்தீப் நங்கல்

போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே பயங்கரம்: கபடி வீரர் சுட்டுக்கொலை, பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை, காரணம் இன்னும் தெரியவில்லை.

  • 1-MIN READ
  • Last Updated :

பஞ்சாப்பில் சர்வதேச கபடி வீரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜலந்தரில் உள்ள மாலியன் கிராமத்தில், நடைபெற்ற கபடி போட்டியில் சந்தீப் நங்கல் (வயது 40) எனும் வீரர் பங்கேற்றிருந்தார். அப்போது காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், வீரரை நோக்கி துப்பாக்கி சுட்டனர்.

இதில் படுகாயடைந்த சந்தீப், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். மொத்தம் 10 குண்டுகள் அவர் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகோடரில் உள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் போட்டித் தளத்தில் இருந்து சந்தீப் வெளியே வந்தபோது, ​​நான்கு பேர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். கபடி வீரர் மீது 8 முதல் 10 தோட்டாக்கள் பாய்ந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலை தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காணொளியில், சிலர் மரங்களுக்கு நடுவே நின்று கண்ணுக்குத் தெரியாத ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுடுவதைக் காணலாம்.

ஜலந்தர் (கிராமப்புற) துணைக் கண்காணிப்பாளர் (நாகோடர்) லக்விந்தர் சிங், வீரர் ஷாகோட்டில் உள்ள நங்கல் அம்பியன் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆனால் இங்கிலாந்தில் குடியேறி பிரிட்டிஷ் குடிமகன் என்று கூறினார். இவர் கிராமத்தில் கபடி போட்டிகளை நடத்தி வந்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இன்னொரு இளைஞருக்கும் காலில் குண்டு பாய்ந்தது என்று கூறப்படுகிறது. கொல்லப்பட்ட கபடி வீரருக்கு இங்கிலாந்தில் மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்தியாவுக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த சந்தீப் நங்கல், கபடி போட்டித்தொடரையும் நடத்தினார்.

போலீசார் கொலையாளிகளை தேடி வருவதோடு, கொலைக்கான காரணத்தைக் கண்டுப்பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்

First published:

Tags: Kabaddi