முகப்பு /செய்தி /இந்தியா / மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் - பட்டியலில் யார்.. யார்..?

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் - பட்டியலில் யார்.. யார்..?

மத்திய அமைச்சரவை கூட்டம்

மத்திய அமைச்சரவை கூட்டம்

  • Last Updated :

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின்னர் மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2-வது முறையாக பதவியேற்று 8 மாதங்களைக் கடந்துள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிக்ஸ் வங்கி தலைவரும், முன்னாள் நிதி ஆயோக் தலைமை நிர்வாகியுமான கே.வி. காமத், மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வப்பன் தாஸ்குப்தா ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கே.வி காமத் மற்றும் தாஸ்குப்தா

இதில், நிதித்துறை இணையமைச்சராக ஆவார் என எதிர்பார்க்கப்படும் கே.வி காமத், ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளதுடன், நிதித்துறையில் அனுபவம் வாய்ந்தவர். இவர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.

ஸ்வப்பன் தாஸ்குப்தாவிற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

First published:

Tags: Modi Cabinet